மும்பை,
பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன். இவர் நடிப்பில் கடந்த 10ம் தேதி வெளியான திரைப்படம் தமால் 4. இந்திர குமார் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் அஞ்சலி ஆனந்த், ஈஷா குப்தா உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
காமெடி எண்டர்டெயின்மண்ட் ஆக ரூ. 200 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள தமால் 4 திரைப்படம் கடந்த 10ம் தேதி (வெள்ளிக்கிழமை) ரிலீஸ் ஆனது.
இந்நிலையில், தமால் 4 திரைப்படம் 4 நாட்களில் உலகம் முழுவதும் ரூ. 100 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. 10ம் தேதி ரிலீஸ் ஆன திரைப்படம் கடந்த 4 நாட்களில் ஒட்டுமொத்தமாக ரூ. 102.83 கோடி வசூல் செய்துள்ளது.
அதேவேளை, ரூ. 200 கோடி பட்ஜெட்டில் உருவான படம் 4 நாட்களில் ரூ. 100 கோடிக்கு சற்று அதிகமாகவே வசூல் செய்துள்ளதால் படக்குழுவினர் சற்று கவலையடைந்துள்ளனர்.