சினிமா செய்திகள்

மீண்டும் களம் காணும் அஜித்குமார் ரேசிங் அணி- யூடியூப் லைவில் பார்க்கலாம்!

பிரான்சில் நடைபெற உள்ள மிச்செலின் லெ மான்ஸ் போட்டியில் பங்கேற்பதற்கு , அஜித்குமார் ரேசிங் அணி தயாராகி உள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழும் அஜித்குமார், கார் பந்தய வீரராகவும் தனது திறமையை நிரூபித்து வருகிறார். 'குட் பேட் அக்லி' படத்திற்கு பிறகு கார் ரேசிங்கில் அதிக கவனம் செலுத்தி வரும் அவர், 'அஜித்குமார் ரேசிங்' என்ற தனது சொந்த பந்தய அணியையும் தொடங்கினார்.

இந்த அணி துபாய், பெல்ஜியம், ஸ்பெயின், அபுதாபி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற பல்வேறு சர்வதேச போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வென்றுள்ளது. தொடர்ந்து பல முக்கிய ரேசிங் தொடர்களிலும் அஜித்குமார் அணி கலந்து கொண்டு வருகிறது.

இந்த நிலையில், பிரான்சில் நடைபெற உள்ள மிச்செலின் லெ மான்ஸ் (Michelin Le Mans Cup) போட்டியில் பங்கேற்பதற்கு , அஜித்குமார் ரேசிங் அணி தயாராகி உள்ளது. சர்வதேச மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகின் முக்கியமான போட்டிகளில் ஒன்றான இந்த தொடரின் இரண்டாம் சுற்றுப் போட்டி, மே 2ஆம் தேதி (இன்று) சர்க்யூட் பால் ரிகார்டில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் அஜித் ரெடான்ட் ரேஸிங் ‘Ajith Redant Racing’ அணி சார்பில் இரண்டு முக்கிய கார்கள் களமிறங்க உள்ளன. இதனால் இந்திய ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இந்த நிலையிலி, இன்று இரவு 10.45 மணிக்கு தொடங்க உள்ள இந்த கார் பந்தயத்தை அஜித்குமார்ரேசிங்-அபிசில்(@AjithKumarRacing-Offical) என்ற யூடியூப் தளத்தில் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்பட உள்ளது.