சினிமா செய்திகள்

தியேட்டர்களில் வெளியாகும் அஜித்குமாரின் ஆவணப்படம்?

இயக்குனர் ஏ.எல். விஜய் அஜித்குமாரின் கார் ரேசிங் பயணத்தை ஆவணப்படமாக இயக்குகிறார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மட்டுமின்றி, ஒரு தீவிர கார்பந்தய வீரராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் குட் பேட் அக்லி படத்திற்கு பிறகு கார் ரேசில் கவனம் செலுத்தி வருகிறார். கடந்த ஆண்டு முதல் கார் ரேஸிங்கில் தீவிரம் காட்டி வரும் அஜித்குமார், அஜித்குமார் ரேஸிங் என்ற தனது சொந்த பந்தய நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். இந்தக் கார் பந்தய நிறுவனம் துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற கார் பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசுகளையும் வென்றுள்ளது. தொடர்ந்து பல்வேறு பந்தயங்களில் பங்கேற்க இந்த அணி திட்டமிட்டுள்ளது.

இதற்கிடையில், அஜித்குமார் ரேஸிங் தொடர்பாக 'RACING ISN'T ACTING' என்ற ஆவணப் படம் உருவாகி வருகிறது. இந்த ஆவணப்படத்தை ஏ.எல். விஜய் இயக்குகிறார். சமீபத்தில் இந்த ஆவணப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது.

தற்போதைய தகவலின்படி, அஜித்தின் பிறந்தநாளான மே 1ஆம் தேதி இந்த ஆவணப்படத்தை தியேட்டர்களில் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ரேசிங் உலகில் அஜித்தின் சாதனைகளை ரசிகர்கள் பெரிய திரையில் காணும் தருணம் விரைவில் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.