சினிமா செய்திகள்

அஜித்தின் 64-வது படத்தை தயாரிக்கும் ஷாலினி... டைட்டில் அறிவிப்பு

இப்படத்தை அஜித்தின் மனைவி ஷாலினி தயாரிக்கிறார்.

சென்னை,

நடிகர் அஜித்தின் அடுத்த திரைப்படத்திற்கு 'டேர்டெவில்' என்று பெயரிடப்பட்டுள்ளது.

மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரனுடன் கூட்டணி

'குட் பேட் அக்லி' படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் மீண்டும் அஜித்தை இயக்குகிறார். இப்படத்தை பற்றிய அப்டேட்டுக்காக ரசிகர்கள் நீண்டநாட்களாக காத்திருந்தநிலையில், தற்போது அந்த அப்டேட் வெளியாகி இருக்கிறது. அஜித்தின் 64-வது படமாக உருவாகும் இப்படத்திற்கு 'டேர்டெவில்' என்று பெயரிடப்பட்டுள்ளது.

ஷாலினி தயாரிப்பு

இப்படத்தை அஜித்தின் மனைவி ஷாலினி தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். 'குட் பேட் அக்லி' திரைப்படம் வெளியாகி சுமார் 15 மாதங்களுக்கு பிறகு அஜித் மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளார்.