மும்பை,
அக்சய் குமார், சயிப் அலிகான் நடிப்பில் உருவாகன் ஹைவான் திரைப்படம் 7 நாட்களில் 15 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.
பிரபல இந்தி நடிகர்கள் அக்சய் குமார், சயிப் அலிகான். இருவரும் இணைந்து ஹைவான் படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை பிரியதர்ஷன் இயக்கியுள்ளார்.
2016ம் ஆண்டு மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான ஒப்பம் படத்தை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. ஹைவான் படத்தில் ஷிரியா பில்கோன்கர் , சாயாமி கேர் ஆகிய நடிகைகள் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ரூ. 115 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் கடந்த 11ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது.
இந்நிலையில், ஹைவான் திரைப்படம் வசூல் ரீதியில் எதிர்பார்ப்பை எட்டவில்லை. அதன்படி, கடந்த 7 நாட்களில் ஹைவான் படம் உலக அளவில் ஒட்டுமொத்தமாக ரூ. 15 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அதேவேளை, படம் ரீலிஸ் ஆவதற்குமுன்பே அதன் சாட்டிலைட், டிஜிட்டல் உரிமத்தை ரூ. 80 கோடிக்கு சோனி பிக்சர்ஸ் நெட் ஒர்க் நிறுவனம் வாங்கிவிட்டதால் தயாரிப்பு நிறுவனம் பெரும் நஷ்டத்தை தவிர்த்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. ஆனாலும், இப்படம் தயாரிப்பாளருக்கு ரூ. 10 கோடிக்கு மேல் நஷ்டத்தையே கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.