சினிமா செய்திகள்

ஏ.எல். விஜய்யின் “காதல் ரீசெட் ரிப்பீட்” படத்தின் இரண்டு நாட்கள் வசூல்.. எவ்வளவு தெரியுமா?

விஜய் இயக்கத்தில் மதுமகேஷ், அர்ஜுன் அசோகன் நடித்துள்ள ‘காதல் ரீசெட் ரிப்பீட்’ படம் கடந்த 6ம் தேதி வெளியானது.

தமிழ் சினிமாவில் பல சூப்பர்ஹிட் திரைப்படங்களை கொடுத்தவர் இயக்குநர் ஏ.எல். விஜய். இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் காதல் ரீசெட் ரிப்பீட். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார்.

இப்படத்தில் மதும்கேஷ், ஜியா ஷங்கர், அர்ஜுன் அசோகன் ஆகியோர் நடித்துள்ளனர். காதல் கதைக்களத்தில் உருவாகி வெளிவந்துள்ள இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளன.

இந்த நிலையில், இரண்டு நாட்களில் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’ படம் ரூ. 20 லட்சம் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.