சினிமா செய்திகள்

“லோகா” படத்தை பாராட்டிய நடிகை ஆலியா பட்

கல்யாணி பிரியதர்ஷன் நடித்த ‘லோகா: சாப்டர் 1 - சந்திரா’ படம் ரூ.125 கோடி வசூலை பெற்றுள்ளது.

துல்கர் சல்மானின் தயாரிப்பு நிறுவனமான வேபேரர் பிலிம்ஸ் மூலம் லோகா: சாப்டர் 1 - சந்திரா படம் ஓணம் பண்டிகையை முன்னிட்டு கடந்த 28 ம் தேதி வெளியானது.இப்படத்தில், பிரேமலு நடிகர் நஸ்லேன் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் சந்து சலிம் குமார், அருண் குரியன் மற்றும் சாந்தி பாலசந்திரன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

சூப்பர்வுமன் படமாக உருவாகி இருக்கும் லோகா: சாப்டர் 1 - சந்திரா எனும் மலையாளத் திரைப்படம் தமிழிலும் வெளியாகியுள்ளது. இப்படத்தை டோமினிக் அருண் எழுதி இயக்கியுள்ளார். திரைக்கு வந்த இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. மர்மங்கள் நிறைந்த கல்யாணி பிரியதர்ஷனின் கதாபாத்திரமும் உருவாக்கமும் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. இத்திரைப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தமிழ் நாட்டில் வெளியிட்டது.

கல்யாணி பிரியதர்ஷன் நடித்த லோகா: சாப்டர் 1 - சந்திரா படம் உலக அளவில் ரூ.125 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. மக்கள் மத்தியில் இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருவதால், படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் மலையாளம் தாண்டி நாடு முழுவதும் ஹிட் ஆகியிருக்கிறது. இப்படம் இந்தியிலும் டப் செய்யப்பட்டு கடந்த 4ம் தேதி வெளியானது. 

இந்நிலையில், பாலிவுட் நடிகை ஆலியா பட் கிராமத்து தொன்மைக் கதையையும் மர்மத்தையும் இணைத்து உருவாகிய புதிய கலவை. இந்தப் படத்துக்குக் கிடைக்கும் அன்பினால் மகிழ்ச்சி அடைகிறேன். சினிமாவில் இந்தமாதிரி படங்களுக்கு நான் எப்போதும் என் அன்பையும் ஆதரவையும் காட்ட ஆவலுடன் இருக்கிறேன் என தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் குறிப்பிட்டுள்ளார்.