சினிமா செய்திகள்

ஆலியா பட் நடிக்கும் "ஆல்பா" படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனம் யாஷ் ராஜ் மிகப்பெரிய பொருட்செலவில் தயாரித்து வருகிறது.

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஆலியா பட் தற்போது இயக்குனர் ஷிவ் ராவில் இயக்கத்தில் உருவாகி வரும் "ஆல்பா" திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனம் யாஷ் ராஜ் மிகப்பெரிய பொருட்செலவில் தயாரித்து வருகிறது.

இதுவரை ஆண் கதாபாத்திரங்களை மையமாக வைத்து பல்வேறு யுனிவர்ஸ் திரைப்படங்களை உருவாக்கி வந்த இந்த நிறுவனம், முதன்முறையாக பெண் கதாபாத்திரத்தை மையமாக கொண்டு இந்த படத்தை உருவாக்கியுள்ளது. இப்படத்தில் பாபி தியோர், அனில் கபூர், சர்வாரி வாக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

முதலில் இந்த படம் கடந்த ஆண்டு டிசம்பர் 25ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சில காரணங்களால் அதன் வெளியீடு தள்ளிப்போனது.

இந்த நிலையில், தற்போது ‘ஆல்பா’ திரைப்படத்தின் புதிய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த படம் வருகிற ஜூலை 10ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

SCROLL FOR NEXT