சினிமா செய்திகள்

மீண்டும் அந்த மாதிரி ஒரு சர்ச்சைக் கதையில் நடிக்கும் அமலா பால்!

ஆடை படத்தை தொடர்ந்து மீண்டும் அந்த மாதிரி ஒரு சர்ச்சைக் கதையில் நடிக்கும் அமலா பால்!

தினத்தந்தி

சென்னை

ஆடை படம் வெளியான பிறகு நிர்வாணமாக நடித்திருந்த அமலா பால் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த நிலையில் அமலா பால் மீண்டும் ஒரு ஆபாச படத்தைத் தேர்ந்தெடுத்து நடிக்க உள்ளார்.

நெட்பிலிக்ஸ் இணையத்தில் லஸ்ட் ஸ்டோரீஸ் எனும் வெப்சீரிஸ் பெண்களுக்குக் காமத்தின் மீது இருக்கும் ஈடுபாட்டைச் சொல்லும் விதமாகக் கடந்த ஆண்டு வெளியானது. இந்தியில் வெளியான இதில் கியாரா அத்வானி, ராதிகா ஆப்தே, மனிஷா கொய்ராலா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

அதில் கியாரா அத்வானி தனது கணவர் மற்றும் மாமியார் முன்பு சுய இன்பத்தில் ஈடுபட்டு சிக்கிக் கொள்வது போன்ற காட்சியில் நடித்திருந்தது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது. ஆனால் விமர்சனங்களை எல்லாம் தாண்டி இந்திய அளவில் அதிக பேரால் பார்க்கப்பட்ட வெப்சீரிஸ் எனும் பெருமையை லஸ்ட் ஸ்டோரிஸ் பெற்றது.

இந்நிலையில் இந்த சீரீஸை தெலுங்கில் திரைப்படமாக எடுக்க முடிவு செய்துள்ளனர். நான்கு கதைகள் கொண்ட இந்த படத்தை நான்கு வெவ்வேறு இயக்குநர்கள் இயக்கவுள்ளனர்.

இந்த படத்தில் அமலா பால், கியாரா அத்வானியின் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் ஓ பேபி படத்தின் இயக்குனர் நந்தினி இந்த படத்தை இயக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஓ பேபி படத்தின் இயக்குனர் நந்தினி இந்த படத்தை இயக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை