சினிமா செய்திகள்

'தங்கலான்' படத்தின் ரிலீஸ் குறித்து படக்குழு வெளியிட்ட அறிவிப்பு

'தங்கலான்' படத்தின் ரிலீஸ் தள்ளிப்போவதாக படக்குழு தெரிவித்துள்ளது.

சென்னை,

இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'தங்கலான்'. இந்த படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. விக்ரமின் தோற்றம் மற்றும் மிரட்டலான நடிப்பு உள்ளிட்டவை ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, 'தங்கலான்' திரைப்படம் வருகிற 26-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் 'தங்கலான்' படத்தின் ரிலீஸ் தள்ளிப்போவதாக படக்குழு தெரிவித்துள்ளது. பொங்கல் தினத்தை முன்னிட்டு படக்குழு வெளியிட்டுள்ள போஸ்டரில் தங்கலான் திரைப்படம் உலகம் முழுவதும் வருகிற ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT