சினிமா செய்திகள்

நந்தி விருதுகள் தேர்வுக் குழுத் தலைவராக பாலையாவை நியமித்த ஆந்திர அரசு

2012 முதல் 2025-ம் ஆண்டு வரையிலான திரைப்படங்களுக்கான நந்தி விருதுகள் தேர்வு செய்யப்பட உள்ளன.

நடிகர் மற்றும் சட்டமன்ற உறுப்பினரான நந்தமுரி பாலகிருஷ்ணா (பாலையா) நந்தி விருது தேர்வுக் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.Andhra Pradesh government appoints Balakrishna as chairman of Nandi Awards selection committee

இந்தியத் திரையுலகத்தில் அந்தந்த மாநில மொழிகளின் அடிப்படையில் திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

ஆந்திர அரசு விருது

ஆந்திர அரசு சார்பில் சிறந்த தெலுங்கு படங்கள் மற்றும் நடிகர்-நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்களுக்கு ஆண்டு தோறும் நந்தி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

1964ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வந்த விருதுகள் ஆந்திர மாநிலம், தெலங்கானா மற்றும் ஆந்திரா என இரண்டாகப் பிரிக்கப்பட்ட பின்பு வழங்கப்படுவது நிறுத்தப்பட்டது. 2012ம் ஆண்டு முதல் நந்தி விருதுகள் வழங்கப்படவில்லை.

இதனிடையே, கடந்த செப்டம்பர் மாதம் நந்தி விருதுகளை மீண்டும் வழங்குவது குறித்த அரசாணையை சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு வெளியிட்டது. தற்போது விருதுகளுக்கான தேர்வுக் குழு உறுப்பினர்களையும் அறிவித்துள்ளார்கள்.

நந்தி விருதுகள் தேர்வு குழுத் தலைவராக பாலையா நியமனம்

அதன்படி நடிகரும், தெலுங்கு தேசம் கட்சியின் எம்எல்ஏவுமான பாலகிருஷ்ணா நந்தி விருதுகள் தேர்வுக்குழுவின் தலைவர் ஆக இருப்பார். தயாரிப்பாளர் அல்லு அரவிந்த், ஒளிப்பதிவாளர் எஸ். கோபால் ரெட்டி, மூத்த நடிகை பிரபா உள்ளிட்டோர் உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

2012 முதல் 2025ம் ஆண்டுக்கான விருதுகள் தேர்வு செய்யப்பட உள்ளன. 2012ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரையிலான விருதுகள் வழங்கும் விழா விஜயவாடாவிலும், 2017ம் ஆண்டு முதல் 2025ம் ஆண்டு வரையிலான விருதுகள் அமரவாதி அல்லது விஜயவாடாவில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT