சென்னை,
‘ஹேங்க் ஓவா’ எனப் பெயரிட்ட ‘டிசி’ படத்தின் புதிய இசை வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. ஹெய்சென்பர்க் எழுதிய இப்பாடலுக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இயக்குநராக பல வெற்றிப்படங்களை கொடுத்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ள லோகேஷ் கனகராஜ், தற்போது நடிகராகவும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டிசி’ திரைப்படத்தில் அவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
‘மாநகரம்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ், தொடர்ந்து ‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’, ‘லியோ’ உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக உயர்ந்தார். மேலும், லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ் (LCU) என்ற புதிய முயற்சியின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். சமீபத்தில் ரஜினிகாந்தை வைத்து இயக்கிய ‘கூலி’ திரைப்படம் வெளியானது. இந்த படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள ‘டிசி’ திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜ் ‘தேவதாஸ்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக வாமிகா கபி ‘சந்திரா’ கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில், சஞ்சனா உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் இடம்பெற்றுள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன. அதில் வாமிகா கபி மற்றும் சஞ்சனா பாலியல் தொழிலாளிகளாகவும், லோகேஷ் கனகராஜ் கேங்ஸ்டராகவும் நடித்திருப்பது தெரியவந்தது. பழிவாங்கும் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரெய்லரில் இடம்பெற்றுள்ள வன்முறை மற்றும் ரத்தம் தெறிக்கும் காட்சிகள் ரசிகர்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளன. இதனால், படத்திற்கு 'ஏ' சான்றிதழ் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், ‘ஹேங்க் ஓவா’ எனப் பெயரிட்ட ‘டிசி’ படத்தின் புதிய இசை வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. ஹெய்சென்பர்க் எழுதிய இப்பாடலுக்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேற்கத்திய இசை போல் இருப்பதால் ரசிகர்களிடம் கவனம் பெற்று வருகிறது.
ஏற்கனவே வெளியான‘ராகா ஆப் ரிவெஞ்’ பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது அடுத்த பாடல் வெளியாகி இருப்பது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.