சென்னை,
தமிழக முதல்-அமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்த கலாநிதி மாறன் - காவேரி தம்பதியர், அவருக்கு திருமண அழைப்பிதழை வழங்கினர்.இதுதொடர்பான புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது.
இசையமைப்பாளர் அனிருத் மற்றும் சன் டிவி குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறன் ஆகியோரின் திருமணம் குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகின்றன. இந்த நிலையில், தமிழக முதல்-அமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்த கலாநிதி மாறன் - காவேரி தம்பதியர், அவருக்கு திருமண அழைப்பிதழை வழங்கியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பான புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது.
தொடர்ந்து வெற்றிப் படங்களுக்கு இசையமைத்து வரும் அனிருத், தற்போது திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராகத் திகழ்கிறார். அவரது இசையில் வெளியான பாடல்கள் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன. இதற்கிடையே, சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் மகளும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கிரிக்கெட் அணியின் நிர்வாகப் பொறுப்பாளருமான காவ்யா மாறனும் அனிருத்தும் காதலித்து வருவதாகக் கடந்த சில ஆண்டுகளாகத் தகவல்கள் பரவி வந்தன. இருப்பினும், இதுகுறித்து இருவரும் வெளிப்படையாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.
தற்போது இருவருக்கும் நவம்பர் 11-ம் தேதி கிரீஸ் நாட்டில் திருமணம் நடைபெறவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் திருமணத்தில் இரு குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாகவும், இதற்காகத் தனி விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, அனிருத் - காவ்யா மாறன் திருமண வரவேற்புக்கான அழைப்பிதழைத் தெலுங்கானா முதல்-அமைச்சர் ரேவந்த் ரெட்டியிடம் கலாநிதி மாறன் - காவேரி தம்பதியர் வழங்கினர்.தொடர்ந்து, அரசியல் தலைவர்கள் மற்றும் திரைப்பிரபலங்களுக்கும் அழைப்பிதழ்கள் வழங்கி வருகின்றனர். இந்த நிலையில், தமிழக முதல்-அமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்த கலாநிதி மாறன் - காவேரி தம்பதியர், அவருக்கு திருமண அழைப்பிதழை வழங்கினர்.இதுதொடர்பான புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது.