அனிருத் - காவ்யா திருமணத்தின் மூலம் ரஜினிகாந்த் குடும்பமும், ஸ்டாலின் குடும்பமும் உறவுமுறையில் இணைந்துள்ளன.
திரைப்பட இசையமைப்பாளர் அனிருத் - சன் குழும தலைவர் கலாநிதி மகள் காவ்யா திருமணம் மூலம், தி.மு.க. தலைவரும், முன்னாள் தமிழக முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் குடும்பத்தினர் உறவினர்களாகி உள்ளனர்.அனிருத் - காவ்யா திருமணம் கடந்த 11-ந்தேதி கிரீஸ் நாட்டில் நடைபெற்றது. இந்த திருமணத்தில் ஸ்டாலின் குடும்பத்தினர் சார்பில் அவரது மனைவி துர்கா, உதயநிதி, மருமகன் சபரீசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதேபோல், நடிகர் ரஜினிகாந்த், அவரது மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா மற்றும் சவுந்தர்யாவின் கணவர் விசாகன் ஆகியோரும் திருமணத்தில் கலந்து கொண்டனர். ரஜினிகாந்தின் மனைவி லதாவின் தம்பி ரவி ராகவேந்திரன். இவரது மகன்தான் அனிருத். இதனால் அனிருத்துக்கு ரஜினிகாந்த் மாமா முறை ஆகிறார்.மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் சகோதரி சண்முகத்தம்மாளின் மகன்தான் முரசொலி மாறன். இவரது மகன் சன் குழும தலைவர் கலாநிதி மாறன். இவரது மகள் காவ்யாவைத்தான் அனிருத் திருமணம் செய்துள்ளார். இதன் மூலம் காவ்யா, ரஜினிகாந்துக்கு மகள் முறையாகிறார்.
அதேபோல், காவ்யாவின் தந்தை கலாநிதி மாறன், ரஜினிகாந்துக்கு சகோதரர் முறையாகிறார். கலாநிதி மாறன், மு.க.ஸ்டாலினுக்கு மருமகன் என்பதால், இந்த திருமணத்தின் மூலம் ரஜினிகாந்தும் ஸ்டாலின் குடும்பத்துக்கு உறவினராகியுள்ளார்.ரஜினிகாந்தும், கலாநிதி மாறனும் திரையுலகில் நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகின்றனர். கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த பல வெற்றிப்படங்களில் ரஜினிகாந்த் நடித்துள்ளார்.ரஜினிகாந்த் நடிக்கும் படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெறும்போது, அவருக்கு பி.எம்.டபிள்யூ. சொகுசு காரை பரிசாக வழங்கி கலாநிதி மாறன் பாராட்டுவது வழக்கம். இதுவரை நண்பர்களாக இருந்து வந்த ரஜினிகாந்துக்கும், கலாநிதி மாறனுக்கும் இடையே தற்போது திருமண உறவு ஏற்பட்டுள்ளது. அனிருத் - காவ்யா திருமணத்தின் மூலம் ரஜினிகாந்த் குடும்பமும், ஸ்டாலின் குடும்பமும் உறவுமுறையில் இணைந்துள்ளன.