சென்னை,
'அரசன்' படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற அனிருத் இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் சிம்புவுடன் புகைப்படம் எடுத்து கொண்டார்.
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் சிலம்பரசன் (எஸ்டிஆர்) நடித்து வரும் 'அரசன்' திரைப்படம் ஆரம்பம் முதலே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார்.
வடசென்னை பின்னணியில் கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் ஆண்ட்ரியா ஜெரெமையா, பிரியங்கா மோகன், யோகி பாபு, சமுத்திரகனி, விக்ராந்த், கிஷோர், அமீர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதாக தெரிகிறது.
2 மாதங்களுக்கு முன் 'அரசன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு திடீரென நிறுத்தப்பட்டதால் கோலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அனைத்து பிரச்சினைகளும் சரிசெய்யப்பட்டு, படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது. தீபாவளி வெளியீட்டை இலக்காகக் கொண்டு சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இரவு பகலாக படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், இசையமைப்பாளர் அனிருத் அரசன் படப்பிடிப்பு தளத்திற்கு வருகை தந்துள்ளார். அங்கு இயக்குநர் வெற்றிமாறன், நடிகர் சிம்பு மற்றும் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு ஆகியோருடன் அவர் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார். இந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகின்றன.
‘அரசன்’ படத்தில் சிம்பு - வெற்றிமாறன் கூட்டணி எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்கனவே அதிகமாக உள்ள நிலையில், அனிருத்தின் வருகை படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.