சினிமா செய்திகள்

‘காந்தாரா’ வரிசையில் மற்றுமொரு பிரமாண்ட படம்.. கவனத்தை ஈர்த்த ‘ஆதி ருத்ரா’

‘ஆதி ருத்ரா’ என்ற புதிய பான் இந்திய திரைப்படம் பிரமாண்டமாக உருவாகிறது.

சென்னை,

‘ஆதி ருத்ரா’ படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தெய்வீகமும் மர்மமும் கலந்த கதைக்களத்தில் உருவாகும் இப்படம், ‘காந்தாரா’ படத்தைப் போன்று ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தெய்வீகமும், மர்மமும் கலந்த கதைக்களத்தில் வெளியான ‘காந்தாரா’ திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து, ஆன்மிகம், நம்பிக்கை மற்றும் தெய்வீக மர்மங்களை மையமாகக் கொண்டு ‘ஆதி ருத்ரா’ என்ற புதிய பான் இந்திய திரைப்படம் பிரமாண்டமாக உருவாகிறது.

ஆதி சாய்குமார் கதாநாயகன்

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஆதி சாய்குமார் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். திரிஷூல் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் ஜி.பிரசாந்த் இப்படத்தைத் தயாரிக்கிறார். நவரசன் எழுதி இயக்குகிறார்.

தெய்வீக மர்மங்களை மையமாகக் கொண்ட கதை

1960 முதல் 1990 வரையிலான காலகட்டத்தின் பின்னணியில் இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. தெய்வீக மர்மங்கள், ஆன்மிகம் மற்றும் மக்களின் நம்பிக்கைகள் சார்ந்த அம்சங்களை மையமாகக் கொண்டு திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. மர்மங்கள் நிறைந்த கதைக்களத்தில் உருவாகும் இப்படம், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘ஆதி ருத்ரா’ திரைப்படத்திற்கு பி.அஜனீஷ் லோக்நாத் இசையமைக்கிறார். ஏ.ஜே.ஷெட்டி ஒளிப்பதிவு செய்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் என ஐந்து மொழிகளில் இப்படம் உருவாகிறது.

ஜனவரியில் படப்பிடிப்பு தொடக்கம்

இப்படத்தின் படப்பிடிப்பை வரும் ஜனவரி மாதம் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது. மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரங்கள் அடுத்தடுத்து வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், ‘ஆதி ருத்ரா’ படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தெய்வீகமும் மர்மமும் கலந்த கதைக்களத்தில் உருவாகும் இப்படம், ‘காந்தாரா’ படத்தைப் போன்று ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

SCROLL FOR NEXT