சினிமா செய்திகள்

ஆண்டனி வர்கீஸின் “காட்டாளன்” படத்தின் ரிலீஸ் அறிவிப்பு

பால் ஜார்ஜ் இயக்கத்தில் ஆண்டனி வர்கீஸ் நடித்து வரும் ‘காட்டாளன்’ படம் மே மாதம் வெளியாகவுள்ளது.

‘மார்கோ’ படத்தை அடுத்து ‘கட்டாளன்’ என்ற திரைப்படத்தை ஷரீப் முகமத் தயாரித்துள்ளார். இப்படத்தை பால் ஜார்ஜ் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில், ஆண்டனி வர்கீஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகை ரஜிஷா விஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார். சுனில், கபீர் துஹான் சிங், ராஜ் திரந்தாசு ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

பான்-இந்திய வெற்றிப் படமான 'காந்தாரா' படத்திற்கு இசையமைத்து பாராட்டப்பட்ட இசையமைப்பாளர் அஜனீஷ் லோக்நாத், தற்போது ஷரீப் முஹமது தயாரிக்கும் இரண்டாவது படமான கட்டாளன் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகியுள்ளார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது.

இந்நிலையில், ‘காட்டாளன்’ படம் மே மாதம் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

SCROLL FOR NEXT