சினிமா செய்திகள்

ஆண்டனி வர்கீஸின் “காட்டாளன்” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

பால் ஜார்ஜ் இயக்கத்தில் ஆண்டனி வர்கீஸ் நடித்து வரும் ‘காட்டாளன்’ படம் மே 28ம் தேதி வெளியாகவுள்ளது.

‘மார்கோ’ படத்தை அடுத்து ‘கட்டாளன்’ என்ற திரைப்படத்தை ஷரீப் முகமத் தயாரித்துள்ளார். இப்படத்தை பால் ஜார்ஜ் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில், ஆண்டனி வர்கீஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகை ரஜிஷா விஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார். தெலுங்கு நடிகர் சுனில், கபீர் துகான் சிங், ராப்பர் பேபி ஜீன், ராஜ் திரண்டாசு, பாலிவுட் நடிகர் பார்தத் திவாரி ஆகியோர் நடித்துள்ளனர்.

தாய்லாந்தில் இதன் ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டன. அப்போது, யானை தொடர்பான காட்சியில், ஆண்டனி காயம் அடைந்தார். புகழ் பெற்ற தாய்லாந்து படமான ‘ஓங்க்- பேக்’ படத்தின் ஆக்‌ஷன் இயக்குநர் கேச்சா காம்பக்டீ மற்றும் அவருடைய குழுவினர் இந்தக் காட்சிகளை அமைத்தனர். இதில் ஓங்க்- பேக்’ படத்தில் நடித்த புகழ்பெற்ற யானையான பொங், இதிலும் நடித்துள்ளது. இப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் வெளியாக இருக்கிறது.

பான்-இந்திய வெற்றிப் படமான 'காந்தாரா' படத்திற்கு இசையமைத்து பாராட்டப்பட்ட இசையமைப்பாளர் அஜனீஷ் லோக்நாத், தற்போது ஷரீப் முஹமது தயாரிக்கும் இரண்டாவது படமான கட்டாளன் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகியுள்ளார். இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது.

இந்நிலையில், ‘காட்டாளன்’ படம் மே 28ம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

SCROLL FOR NEXT