சினிமா செய்திகள்

மறு தணிக்​கைக்கு சென்ற அனுபமா பரமேஸ்வரனின் “போகி” படம்

சம்பத் நந்தி இயக்கத்தில் சர்வானந்த், அனுபமா பரமேஸ்வரன் நடிக்கும் ‘போகி’ தெலுங்கு படம் நவம்பர் 12-ம் தேதி வெளியாகவிருக்கிறது.

சம்பத் நந்தி இயக்கத்தில் சர்வானந்த், அனுபமா பரமேஸ்வரன் நடிக்கும் ‘போகி’ தெலுங்கு படத்தை பார்த்த தணிக்​கைக் குழு​வினர் மறு தணிக்​கைக்கு அனுப்​பியுள்​ளனர்.

ஸ்ரீ சத்யா சாய் ஆர்ட்ஸ் தயாரிப்பில் சம்பத் நந்தி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘போகி’ எனும் தெலுங்கு படத்தில் அனுபமா பரமேஸ்வரன் இந்தக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சர்வானந்த் இதில் நாயகனாக நடிக்க டிம்பிள் ஹையாதி, அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நாயகிகளாக நடித்து வருகிறார்கள்.

1960ல் தெலங்கானா, மகாராஷ்டிரா எல்லைப் பிரச்னைகளை மையமாக வைத்து இந்தப்படம் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

‘போகி’ தெலுங்கு படத்தில் கந்துலா சுலோசனா ராணியாக அனுபமா பரமேஸ்வரன் இதில் நடித்துள்ளார்.

கிராமத்து இளைஞராக சர்வானந்த் நடித்துள்​ள இப்​படம் நவம்பர் 12-ம் தேதி வெளியாவ​தாக அறி​விக்​கப்​பட்​டிருந்​தது.

மறு தணிக்​கை

இந்​நிலை​யில் படத்​தைப் பார்த்த தணிக்​கைக் குழு​வினர் மறு தணிக்​கைக்கு அனுப்​பியுள்​ளனர். படத்​தில் அதி​க​மான வன்​முறை மற்​றும் ரத்​தம் சிந்​தும் காட்​சிகள் இருப்​ப​தால் மறு தணிக்​கைக்கு அனுப்பி இருப்​ப​தாகக் கூறப்​படு​கிறது. இத​னால் படத்​தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT