சினிமா செய்திகள்

சிரஞ்சீவியின் 158வது படத்தில் இணைந்த அனுராக் காஷ்யப்

பாபி கொல்லி இயக்கத்தில் சிரஞ்சீவி நடிக்கும் ‘காகா’ படம் வருகிற 2027-ம் ஆண்டு ஜனவரி 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

சிரஞ்சீவியின் ‘காகா’ படத்தில் அனுராக் காஷ்யப் இணைந்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

தெலுங்கு சினிமாவின் மெகாஸ்டார் என்ற அழைக்கப்படும் முன்னணி நடிகர் சிரஞ்சீவி. இவர் தற்போது இயக்குநர் பாபி கொல்லியுடன் மீண்டும் இணைந்துள்ள புதிய திரைப்படத்தில் நடித்துவருகிறார்.

படத்தின் டைட்டில் அறிவிப்பு

சிரஞ்சீவிக்கு பிறந்த நாளில் படக்குழு படத்தின் டைட்டில், கிளிம்ப்ஸ் மற்றும் ரிலீஸ் தேதியை அறிவித்தது. இந்த படத்திற்கு ‘காகா’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

கிளிம்ப்ஸ் வீடியோ

படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவில் சிரஞ்சீவி ‘அம்மாஜி அக்வா இண்டஸ்ட்ரீஸ்’ நிறுவனத்தில் சூப்பர்வைசர்-ஆக பணியாற்றும் ‘சத்யம்’ என்ற கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். எளிமையான தோற்றத்துடன், அனைவரிடமும் அன்பாக பழகும் ஒரு சாதாரண மனிதராக அவர் காட்டப்படுகிறார். சத்யம் ஒரு சாதாரண மனிதராக தோன்றினாலும், கிளிம்ப்ஸில் வரும் ஒரு சம்பவம் அவரது கதாபாத்திரத்தின் பின்னணியில் மிகப்பெரிய ரகசியம் இருப்பதை உணர்த்துகிறது.

சங்கராந்தி வெளியீடு

சிரஞ்சீவி மற்றும் பாபி கொல்லி கூட்டணி ஏற்கனவே ‘வால்டேர் வீரய்யா’ படத்தில் இணைந்து வெற்றியைப் பெற்ற நிலையில், இந்த புதிய கூட்டணி மீண்டும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

இத்திரைப்படம் வருகிற 2027-ம் ஆண்டு ஜனவரி 13-ம் தேதி சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சிரஞ்சீவியின் ‘காகா’ படத்தில் அனுராக் காஷ்யப் இணைந்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

SCROLL FOR NEXT