தமிழில், விஜய்யை வைத்து வரிசையாக படங்களை இயக்கிய அட்லீ, இந்திக்கு சென்று ’ஜவான்’ படத்தை இயக்கினார். ஷாருக்கான், தீபிகா படுகோன் நடித்த இப்படம் ரூ.1,000 கோடிக்கு மேல் வசூலை அள்ளியது. அந்த படத்தை தொடர்ந்து அட்லீ, அல்லு அர்ஜுனை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக ஏஏ22xஏ6(AA22XA6) எனப் பெயரிடப்பட்டுள்ளது
அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் அல்லு அர்ஜூனுடன் இணைந்து தீபிகா படுகோன் நடிக்கிறார். இதற்கான அறிவிப்பு வீடியோவை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருந்தனர். மேலும், நடிகைகள் ராஷ்மிகா மந்தனா மற்றும் மிருணாள் தாகூர் ஆகியோர் இப்படத்தில் நடிக்க கமிட்டாகியிருப்பதாக தகவல் வெளிவந்தது.
இந்த நிலையில், 8 வருடங்களாக சினிமாவில் நடிக்காமல் இருந்து வரும் பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா, அல்லு அர்ஜுன் திரைப்படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் மனைவியும், பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகையுமான அனுஷ்கா ஷர்மா கடந்த 2018ல் வெளிவந்த "ஜீரோ" படத்தில் கடைசியாக கதாநாயகியாக நடித்திருந்தார் நிலையில், அதன்பின் அவர் எந்த படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை. குறிப்பாக திருமணத்திற்கு பின் அவர் சினிமாவிலிருந்து விலகி இருக்கிறார்.