சென்னை,
சென்னை வடபழனியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் ராதாரவி பேசினார். அப்போது அவர் கூறியதாவது: வேல்முருகன் மனதில் பட்டதை பேசுபவர், அதனால் அவர் நிறைய பட்டிருக்கிறார். நானும் நடிகை அம்பிகாவும் அந்த காலத்தில் நடித்த பேய்வீடு, நாகம் போன்ற படங்கள் நன்றாக ஓடியது. என்னுடன் அந்த காலத்தில் நாயகியாக நடிக்க ஒப்புக்கொண்ட ஒரே நடிகை அம்பிகா தான்.
சினிமாவில் இருந்த ஒரு சகோதரர் இன்று பெரிய இயக்கங்களுக்கு எல்லாம் போட்டியாக நிற்கிறார். சினிமாவில் இருந்தால் மட்டும் கூட்டம் சேரும் என்று நினைக்க கூடாது, அர்த்தம் இருந்தால் தான் கூட்டம் சேரும் . சினிமாவில் எந்தநேரத்தில் என்ன வேண்டுமானால் நடக்கலாம். இப்போ நான் பேசிகிட்டு இருக்கேன். இந்த மேடையை விட்டு கீழ இறங்குறப்போ திடீர்னு நான் தலைவன் ஆகிடுவேன். என்ன ஏன்னு நீங்க கேட்க முடியாது. ” என்றார்.