கோப்புப்படம் 
சினிமா செய்திகள்

எல்லை தாண்டாத எந்த விஷயங்களும் நல்லது தான் - நடிகை பாயல் ராஜ்புத்

நடிகைகள் கவர்ச்சி காட்டுவது தவறில்லை என்று பாயல் ராஜ்புத் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையான பாயல் ராஜ்புத், தமிழில் 'லெஜண்ட்' சரவணன் ஜோடியாக 'லீடர்' படத்தில் நடித்து கவனம் ஈர்த்தார். தற்போது தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது கவர்ச்சி படங்களையும் வெளியிட்டு கவனம் ஈர்த்தார். அவருக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இதற்கிடையில் கவர்ச்சி குறித்து அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறும்போது, 'நடிகைகள் கவர்ச்சி காட்டுவது தவறில்லை. அது முகம் சுழிக்கும்படி இருக்கக்கூடாது. இங்கு அழுகை, ஆக்சன் போல கவர்ச்சியும் நடிப்பில் ஒரு அங்கம்தான். அதற்காக உடனே விமர்சிப்பது தான் தவறு. சினிமா ஒரு பொழுதுபோக்குத்துறை. இங்கு ரசிகர்களை மகிழ்விக்க வேண்டும். எனவே எல்லை தாண்டாத எந்த விஷயங்களும் நல்லது தான். சரியானது தான்' என்றார்.