சினிமா செய்திகள்

‘காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ்’ படத்தின் டிரெய்லரை வெளியிட்ட ஏ.ஆர்.முருகதாஸ்

இப்படம் கோலிசோடா பாகங்களின் தொடர்ச்சியாக உருவாகிறது.

சென்னை,

‘கோலி சோடா’ படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த இயக்குனர் விஜய் மில்டன், ‘காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ்’ படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் பரத், சுனில், ஆரி அர்ஜுனன், ராப் பாடகர் பால் டப்பா, அம்மு அபிராமி, கிஷோர் டிஎஸ், விஜேதா, பிரசன்னா பாலச்சந்திரன் மற்றும் இமான் அண்ணாச்சி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.. இந்த படத்தின் மூலம் பாடகர் பால் டப்பா நடிகராக அறிமுகமாகிறார்.

இப்படம் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியாக உள்ளது. ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான விஜய் மில்டன் தனது ரப் நோட் நிறுவனத்தின் மூலம் தயாரித்து, இயக்கிய இந்த புதிய படத்தில் தெலுங்கு சினிமாவின் இளம் நடிகர் ராஜ் தருண் நடித்துள்ளார் . இப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்துள்ளார். இப்படம் கோலிசோடா பாகங்களின் தொடர்ச்சியாக உருவாகிறது. ‘காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. இந்த டிரெய்லரை பிரபல இயக்குனர் ஏஆர் முருகதாஸ் வெளியிட்டுள்ளார். இந்த டிரெய்லர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.