சினிமா செய்திகள்

பாலிவுட்டில் தயாரிப்பாளராக அவதாரம் எடுக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்

இப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை,

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களின் பட்டியலில் இருப்பவர் ஏ.ஆர் முருகதாஸ். 'தீனா' படத்தின் மூலம் இயக்குனரான அறிமுகமான முருகதாஸ், சமீபத்தில் சிவகார்த்திகேயனின் மதராஸி படத்தை இயக்கி இருந்தார். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

தமிழ் சினிமா மட்டுமல்லாமல் பாலிவுட் திரையுலகிலும் இயக்குனராக முத்திரை பதித்த ஏ.ஆர்.முருகதாஸ், தற்போது தயாரிப்பாளராகவும் களம் இறங்குகிறார். அதாவது, தன்னிடம் இணை இயக்குனராக பணியாற்றிய பாலாஜி கணேஷ் இயக்கும் புதிய இந்திப் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்க உள்ளார். இந்த படத்தில் நடிகர் சன்னி தியோல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தை ரிதேஷ் சித்வகனி, பர்ஹான் அக்தர் ஆகியோருடன் இணைந்து ஏ.ஆர்.முருகதாஸும் தயாரிக்கிறார். இப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏ.ஆர்.முருகதாஸ் அமீர்கான் நடித்த 'கஜினி' படம் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து 'ஹாலிடே, 'அகிரா, 'சிக்கந்தர்' உள்ளிட்ட படங்களையும் இயக்கியுள்ளார்.

SCROLL FOR NEXT