சினிமா செய்திகள்

சென்னையில் நடைபெறவிருந்த ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி ரத்து

சென்னை பனையூரில் நடைபெறவிருந்த ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு உள்ளது.

சென்னை,

சென்னை பனையூரில் 'இசைப்புயல்' ஏ.ஆர்.ரகுமானின் 'மறக்குமா நெஞ்சம்' இசை நிகழ்ச்சி நடைபெற இருந்தது. இந்த நிலையில், தற்போது நிகழ்ச்சியானது ரத்து செய்யப்பட்டு உள்ளது.

மழை காரணமாக இசை நிகழ்ச்சி நடைபெற இருந்த மைதானத்தில் நீர் தேங்கியதால் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து, வேறொரு நாளில் இசை நிகழ்ச்சி நடைபெறும் என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.