சினிமா செய்திகள்

சிம்பு பிறந்தநாளை முன்னிட்டு, சிறப்பு போஸ்டர் வெளியிட்டு வாழ்த்திய “அரசன்” படக்குழு

சிலம்பரசன் டி.ஆர் இன்று தனது 43-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

சென்னை,

நடிகர் சிம்புவிற்கு மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல என ஹாட்ரிக் ஹிட் அடித்தது. சிம்புவின் 49-வது படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்குவதாக அறிவிப்பு வெளியானது. வெற்றிமாறன் இயக்கத்தில் ‘அரசன்’ படத்தில் சிம்பு தற்போது நடித்து வருகிறார். இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் புரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. வடசென்னை கதைகளத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் சமுத்திரகனி , கிஷோர் , விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கிறார்.

கோவில்பட்டியில் முதற்கட்ட படப்பிடிப்பு துவங்கியது. ‘அரசன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் சிம்புவுடன் விஜய் சேதுபதி இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலானது. அந்த புகைப்படத்தில் ’டூரிஸ்ட் பேமிலி’ பட நடிகை யோகலட்சுகியும் காணப்படுகிறார்.

இந்நிலையில், சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு, ‘அரசன்’ படக்குழு சிறப்பு போஸ்டர் வெளியிட்டு வாழ்த்தியுள்ளது. சிம்புவின் நடிப்பில் கடந்த 2008ஆம் ஆண்டு வெளியான ‘சிலம்பாட்டம்’ படம் அவரின் பிறந்தநாளை முன்னிட்டு பிப்ரவரி 6ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. காதலர் தினத்தை முன்னிட்டு ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படம் ரீ-ரிலீஸாகும். ‘அரசன்’ திரைப்படத்தின் அப்டேட் சிம்புவின் பிறந்தநாளில் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

திமுகவை வீழ்த்தும் வேலையை மட்டும் விஜய் பார்க்கட்டும்- டிடிவி தினகரன்

அமெரிக்காவின் நெருக்கடிக்கு மோடி பணிந்துவிட்டார்: ராகுல் காந்தி விமர்சனம்

தென்னை விவசாயத்தை மேம்படுத்த பட்ஜெட்டில் புதிய திட்டம் அறிவிப்பு

சட்டத்தை மதிக்க முடியாவிட்டால் இந்தியாவில் இருந்து வெளியேறுங்கள்: வாட்ஸ்அப்பிற்கு சுப்ரீம் கோர்ட்டு எச்சரிக்கை

மக்களவையில் அமளி: மாணிக்கம் தாகூர் உள்பட 8 எம்.பிக்கள் சஸ்பெண்ட்