சினிமா செய்திகள்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் அர்ஜுன் தாஸ் சாமி தரிசனம்

அர்ஜுன் தாஸ், சஞ்சனா நடராஜன் நடித்துள்ள ‘ஜான் டோ’ படம் வருகிற 13ந் தேதி வெளியாக உள்ளது.

நடிகர் அர்ஜுன் தாஸ் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு இன்று மாலை வருகை தந்தார்.

அண்ணாமலையார் தரிசனம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு தலைவர்கள், நடிகைகள், நடிகர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்வது வழக்கம்.

இந்த நிலையில் பிரபல தமிழ் திரைப்பட நடிகர் அர்ஜுன் தாஸ் இன்று மாலை திருவண்ணாமலை வந்தார். இதையடுத்து அவர், திருவண்ணாமலை அண்ணாமலையாரை நேரில் கண்டு நெகிழ்ச்சியுடன் வழிபட்டார். சாமி தரிசனம் செய்த பின்னர், அர்ஜுன் தாஸ் மனமுருகி பிரார்த்தனை செய்தார்.

கோவில் பிரசாதம் - ஆசி

தரிசனத்திற்குப் பிறகு கோவில் வளாகத்தில் அர்ஜுன் தாஸுக்கு திருவண்ணாமலை அண்ணாமலையார் அதிகாரிகள் மற்றும் வேத பண்டிதர்கள் ஆசி வழங்கினர். அதனைத் தொடர்ந்து அவருக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

ரசிகர்கள் உற்சாகம்

நடிகர் அர்ஜுன் தாஸ் கோவிலுக்கு வந்த தகவல் அறிந்ததும், அங்கு கூடியிருந்த ரசிகர்களும் பொதுமக்களும் அவருடன் செல்பி மற்றும் புகைப்படங்கள் எடுத்துக்கொள்ள ஆர்வம் காட்டினர். அவரும் ரசிகர்களுடன் புன்னகையோடு புகைப்படம் எடுத்துக் கொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

அர்ஜுன் தாஸ், சஞ்சனா நடராஜன் நடித்துள்ள ‘ஜான் டோ’ படம் வருகிற 13ந் தேதி வெளியாக உள்ளது.

SCROLL FOR NEXT