சினிமா செய்திகள்

அர்ஜுன் தாஸின் ‘ஒன்ஸ் மோர்’.. மனம் திறந்து பாராட்டிய இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜுன் தாஸ் நடித்த ‘ஒன்ஸ் மோர்’ படத்தை பாராட்டி பதிவிட்டுள்ளார்.

சென்னை,

ஒன்ஸ் மோர்’ படத்தை பார்த்த இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "இந்த அற்புதமான மற்றும் மிகப்பெரிய வெற்றிப் படத்திற்காக உங்களுக்கு மீண்டும் ஒருமுறை வாழ்த்துகள், இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒரு மகிழ்ச்சியான மற்றும் இதமான திரைப்பட அனுபவத்தை வழங்கியுள்ளார்." என்று தெரிவித்துள்ளார்.

அர்ஜுன் தாஸ் - அதிதி ஷங்கர் கூட்டணி

'மாஸ்டர்', 'கைதி', 'விக்ரம்' போன்ற படங்களில் வில்லன் மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் பிரபலமான அர்ஜுன் தாஸ், பின்னர் 'அநீதி', 'ரசவாதி', 'போர்' உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். தற்போது அவர், நடிகை அதிதி ஷங்கர் ஜோடியாக 'ஒன்ஸ் மோர்' திரைப்படத்தில் நடித்துள்ளார்.

காதல் கதைக்களத்தில் உருவான படம்

'குட் நைட்' மற்றும் 'லவ்வர்' போன்ற வெற்றிப் படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாப் படத்திற்கு இசையமைத்துள்ளார். காதல் மற்றும் பேண்டஸி கதைக்களத்தில் நேற்று வெளியான இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

ஆதிக் ரவிச்சந்திரனின் பாராட்டு

இந்த நிலையில், ‘ஒன்ஸ் மோர்’ படத்தை பார்த்த இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், "இந்த அற்புதமான மற்றும் மிகப்பெரிய வெற்றிப் படத்திற்காக உங்களுக்கு மீண்டும் ஒருமுறை வாழ்த்துகள் சகோதரா!.. அர்ஜுன் தாஸ் - இரண்டு 'ரகுவரன்' கதாபாத்திரங்களிலும் உங்கள் நடிப்பு மிகவும் பிடித்திருந்தது. அதிதி சங்கர் - உங்கள் துடிப்பான ஆற்றல் தனித்துத் தெரிகிறது ; சோனாவும் மிகச் சிறப்பாகப் பணியாற்றியுள்ளார். இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒரு மகிழ்ச்சியான மற்றும் இதமான திரைப்பட அனுபவத்தை வழங்கியுள்ளார்." என்று தெரிவித்துள்ளார்.