சினிமா செய்திகள்

அர்ஜுன் பிரபாகரன் நடிக்கும் “பேட்டில்” படத்தின் டீசர் வெளியீடு

நாராயணன் இயக்கத்தில் அர்ஜுன் பிரபாகரன், ஆராத்யா நடித்துள்ள ‘பேட்டில்’ படம் ஏப்ரலில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

பா. நாராயணன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பேட்டில்’ திரைப்படத்தில் அர்ஜுன் பிரபாகரன், ஆராத்யா, முனிஸ்காந்த், சரவண சுப்பையா, சுப்பிரமணியம் சிவா, சுருளி, காயத்ரி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஆர் .யுவராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீவா இசையமைத்திருக்கிறார். அனைவருக்கும் சமமான கல்வி கிடைப்பது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை எலைட் டாக்கீஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. பாஸ்கரன் தயாரித்திருக்கிறார்.

அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்காக காத்திருக்கும் இந்த திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் இடம் பிடித்திருக்கும் ''அநீதிக்கு எதிரான நமது ஒவ்வொருவரின் மௌனமும் ஒரு வகையினதான வன்முறை தான்'' என்ற பின்னணி குரல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

SCROLL FOR NEXT