வாஷிங்டன்,
ஆடம் ஷாங்க்மேன் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரைப்படத்தில் நடிகர் அர்னால்ட் கிறிஸ்துமஸ் தாத்தாவாக நடித்துள்ளார்.
அமெரிக்காவில் புகழ் பெற்ற பாடி பில்டராக இருந்து வந்த அர்னால்டு 1970-ல் வெளியான 'ஹெர்குலஸ் இன் நியூயார்க்' படம் மூலம் நடிகராக அறிமுகமானார். பினனர் 1984-ல் வெளியான 'தி டெர்மினேட்டர்' மூலம் ஆக்சன் ஹீரோவாக உருவெடுத்தார். உலகளவில் இளைஞர்கள் ஜிம்முக்கு செல்ல காரணமே அர்னால்டுதான். முன்னாள் மேயராகவும் இருந்த அர்னால்ட் தற்போது லாஸ் ஏஞ்சல்ஸில் வாழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில், நடிகர் அர்னால்ட் தனது அடுத்த படத்தில் கிறிஸ்துமஸ் தாத்தாவாக(Santa Claus) அவதாரம் எடுத்துள்ளார். இயக்குநர் ஆடம் ஷாங்க்மேன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தி மேன் வித் தி பேக்’(The Man with the Bag) திரைப்படத்தில் கிறிஸ்துமஸ் தாத்தாவாக நடிகர் அர்னால்ட் நடித்துள்ளார்.
குழந்தைகளை கவரும் வகையில் பேண்டஸி(Fantasy) கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், வரும் டிசம்பர் 2-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. நடிகர் ஆலன் ரிட்ச்சன், நடிகை அக்வாபினா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
கிறிஸ்துமஸ் தாத்தாவாக வரும் அர்னால்ட் தனது பரிசு பையை தொலைத்துவிடுவது போலவும், அதனை தேடும் பணியில் கதாநாயகன் உதவுவது போலவும் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. அசத்தலான கிராபிக்ஸ் காட்சிகளுடன் உருவாகியுள்ள இந்த படத்தின் டிரெய்லர் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.