தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் அருள்நிதி. இவர் 'வம்சம், மவுனகுரு, டிமாண்டி காலனி, ஆறாது சினம், இரவுக்கு ஆயிரம் கண்கள், கே-13, டிமாண்டி காலனி 2' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
இதனிடையே, தகராறு, வீர சிவாஜி, தேன் படங்களை இயக்கவர் கணேஷ் விநாயக். இவரது இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’அருள்வான்’. இப்படத்தில் ஆரவ், ரம்யா பாண்டியன், காளி வெங்கட் உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், மே தின வாழ்த்து தெரிவித்துள்ள அருள்வான் படக்குழுவினர் படத்தின் சிறப்பு போஸ்டரை இன்று வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. அருள்வான் படத்தின் ரிலீஸ் தேதி இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.