சினிமா செய்திகள்

ஆர்யாவின் 40வது படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு

நிகில் முரளி இயக்கும் ஆர்யாவின் 40வது திரைப்படத்தில் நிகிலா விமல் மற்றும் வைஷ்ணவி சைதன்யா ஆகியோர் நடித்துள்ளனர்.

ஆர்யாவின் 40வது படத்தின் டைட்டில் டீசர் வெளியாகியுள்ளது.

ஆர்யா வித்தியாசமான கதை, கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். நான் கடவுள், மதராச பட்டினம், அவன் இவன், இரண்டாம் உலகம், மகாமுனி, சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட பல படங்கள் ஆர்யா திறமையான நடிப்பை வெளிப்படுத்துவதாக அமைந்தன. இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் ‘வேட்டுவம்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தைத் தொடர்ந்து ‘சர்பட்டா’ இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார்

ஆர்யாவின் 40வது படம்

ஆர்யாவின் 40வது படத்தை நிகில் முரளி இயக்குகிறார். ஆர்யாவுக்கு ஜோடியாக நிகிலா விமல், வைஷ்ணவி சைதன்யா ஆகிய இருவரும் நடித்துள்ளார்கள். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜை கடந்த ஆண்டு டிசம்பர் 12ம் தேதி நடைபெற்றது. உடற்பயிற்சி கூடத்தில் நடிகைகள் இருவருடனும் ஆர்யா எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலானது.

படப்பிடிப்பு நிறைவு

ஆர்யா 40 -வது படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதை உறுதிப்படுத்தியுள்ளார்கள். மேலும் இந்த படத்தை ஆர்யா மற்றும் அவரது மனைவி சாயிஷா ஆகிய இருவரும் தி ஷோ பீப்பிள் என நிறுவனத்தின் மூலம் தயாரித்து உள்ளார்கள்.

டைட்டில் டீசர் வெளியீடு

இந்நிலையில், ஆர்யாவின் 40வது படத்தின் டைட்டில் டீசர் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு ‘ஹலோ காதல்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்கான வசனங்களை இயக்குநர் ஹலீதா ஷமீம் எழுதியுள்ளார்.

ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள இப்படம் வரும் டிசம்பரில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

SCROLL FOR NEXT