தணிக்கை வாரியம் அசோக் செல்வன், பிரீத்தி முகுந்தன் நடித்த ‘அன்பில் அவன்’ படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது.
அசோக் செல்வன் தற்போது ‘அன்பில் அவன்’ என பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடித்துள்ளார். இப்படம் அசோக் செல்வனின் 23-வது படமாகும். இப்படத்தில் நடிகை பிரீத்தி முகுந்தன் கதாநாயகியாக நடித்துள்ளார். ‘போர் தொழில்’ படத்தின் இயக்குநர் விக்னேஷ் ராஜா இப்படத்தின் கதையை எழுதியுள்ளார். அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் ராமகிருஷ்ணன் படத்தை இயக்கியுள்ளார். ‘ஓ மை கடவுளே’ படத்தை தயாரித்த ஹேப்பி ஹை பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் இப்படத்தை அசோக் செல்வன் தயாரித்துள்ளார்.
‘அன்பில் அவன்’ படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். அதிரடி காட்சிகளுக்கு பிரபல சண்டைப் பயிற்சியாளர் பீட்டர் ஹெயின் பணியாற்றியுள்ளார். காதல் மற்றும் ஆக்ஷன் அம்சங்கள் கலந்து உருவாகியுள்ள இப்படம், அசோக் செல்வனின் முந்தைய படங்களிலிருந்து மாறுபட்ட அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆக்ஷன் கலந்த காதல் கதையாக உருவான இப்படம் செப்டம்பர் 25 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இதனை அக்டோபர் 2 ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படுவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், தணிக்கை வாரியம் அசோக் செல்வன், பிரீத்தி முகுந்தன் நடித்த ‘அன்பில் அவன்’ படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது.