சினிமா செய்திகள்

22 வயதில் கர்ப்பமா? - நடிகை அனுசித்ரா விளக்கம்

22 வயதில் கர்ப்பம் என வெளியான தகவலுக்கு நடிகை அனுசித்ரா விளக்கம் அளித்துள்ளார்.

தமிழில் பொதுநலன் கருதி படத்தில் நடித்துள்ளவர் அனுசித்ரா. தற்போது மேலும் சில படங்களுக்கு ஒப்பந்தமாகி உள்ளார். மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இவருக்கு 2015-ல் திருமணம் முடிந்து விட்டது. தனது சிறு வயது நண்பர் விஷ்ணு பிரசாத் என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார். அப்போது அவருக்கு வயது 18.