சினிமா செய்திகள்

நேரு உள்விளையாட்டு அரங்கத்தில்.. `கர' திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி

'கர' திரைப்படம் வருகிற 30-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

சென்னை,

'போர் தொழில்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் 'கர'. இந்த படத்தில் மமிதா பைஜு கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், கே.எஸ். ரவிகுமார், கருணாஸ், ஜெயராம், பிருத்வி பாண்டியராஜன், சுராஜ் வெஞ்சரமூடு, எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம் 1990-களில் ராமநாதபுரத்தில் நடந்த வங்கிக் கொள்ளை பற்றிய கதைக்களத்துடன் உருவாகியுள்ளது. கிராமத்து கதைக்களத்தில் ஆக்சன் பாணியில் உருவாகியுள்ள இந்த படம் வருகிற 30-ந்தேதி வெளியாக உள்ளது.

இதற்கிடையில், படம் வெளியாக இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில், படத்தின் புரமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கர படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் வருகிற 19ந் தேதி நடைபெற உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அதற்கான புரோமோ வீடியோ ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

SCROLL FOR NEXT