சென்னை,
தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகரான அதர்வா 'பாணா காத்தாடி, பரதேசி, சண்டிவீரன்' போன்ற படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர். இவர் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான 'பராசக்தி' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரவேற்பை பெற்றார்.
அதனை தொடர்ந்து, ஆகாஷ் பாஸ்கரின் இயக்கத்தில் ‘இதயம் முரளி’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் அதர்வாவுடன் இணைந்து பிரீத்தி முகுந்தன், கயாடு லோஹர், நட்டி நட்ராஜ், ரக்சன், தமன், நிஹாரிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். டான் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், அதர்வா, பிரீத்தி முகுந்தன் நடிக்கும் ‘இதயம் முரளி’ படம் வரும் ஜூலை 10ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
முன்னதாக, அதர்வாவின் தந்தையான மறைந்த பிரபல நடிகர் முரளி ரசிகர்களால் ‘இதயம் முரளி’ என அழைக்கப்பட்டு வந்த நிலையில், அந்தப் பெயரையே இப்படத்திற்கு சூட்டியுள்ளது பெரியளவில் கவனம் ஈர்த்துள்ளது.