சினிமா செய்திகள்

அதர்வாவின் “இதயம் முரளி” படத்தின் “வான் வான்” பாடல் வெளியானது

அதர்வா, பிரீத்தி முகுந்தன் நடித்துள்ள ‘இதயம் முரளி’ படத்திலிருந்து ‘வான் வான்’ என்ற 3வது பாடல் வெளியாகி உள்ளது.

சென்னை,

தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகரான அதர்வா 'பாணா காத்தாடி, பரதேசி, சண்டிவீரன்' போன்ற படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர். இவர் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான 'பராசக்தி' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரவேற்பை பெற்றார்.

அதனை தொடர்ந்து, ஆகாஷ் பாஸ்கரின் இயக்கத்தில் ‘இதயம் முரளி’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் அதர்வாவுடன் இணைந்து பிரீத்தி முகுந்தன், கயாடு லோஹர், நட்டி நட்ராஜ், ரக்சன், தமன், நிஹாரிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். டான் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், ‘இதயம் முரளி’ படத்திலிருந்து 3வது பாடலான ‘வான் வான்’ வெளியாகியுள்ளது. இந்தப் பாடலை பாடகர் மோஹித் சௌஹான் பாடியுள்ளார்.