சினிமா செய்திகள்

“அட்டக்கத்தி” தினேஷின் புதிய படத்தின் டைட்டில் அறிவிப்பு

நடிகர் தினேஷின் புதிய படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

நடிகர் ‘அட்டக்கத்தி’ தினேஷின் புதிய படத்தின் டைட்டில் அறிவிப்புடன் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி கவனம் பெற்றுள்ளது.

‘அட்டக்கத்தி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தினேஷ். இவர், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, குக்கூ, விசாரணை உள்ளிட்ட முக்கியத் திரைப்படங்களில் நடித்து கவனம் பெற்றார். தொடர்ந்து, இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. பா. ரஞ்சித் இயக்கத்தில் ‘வேட்டுவம்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். ‘வேட்டுவம்’ திரைப்படம் வரும் டிசம்பரில் வெளியாக இருக்கிறது.

படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

நடிகர் தினேஷ் தனது 26ஆவது படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்துக்கு ‘பந்தா கேங்ஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது. மதி ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தை வி6 பிலிம் பிரைவேட் லிமிடெட் சார்பாக வேலாயுதம் என்பவர் தயாரித்துள்ளார்.

தினேஷ் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழு டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது. ‘ஓஜி ரூட்டு தல’ என்ற அடைமொழியுடன் இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் கயல் ஆனந்தி, லிங்கேஷ், சுபா வரதராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். முழு நீள காமெடி படமாக உருவாக்கப்பட்டிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுப்பெறும் தருவாயில் உள்ளது.

SCROLL FOR NEXT