சினிமா செய்திகள்

கவனம் ஈர்க்கும் சமுத்திரக்கனி பட பாடல்

தற்போது இந்த பாடல் சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.

தினத்தந்தி

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் முத்திரை பதித்திருப்பவர் சமுத்திரக்கனி. இவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே பரவலாக பேசப்பட்டு வருகிறது. சமீபத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த துணிவு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதைத்தொடர்ந்து, தற்போது இவர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் 'தலைக்கூத்தல்' படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கதிர், வசுந்தரா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஒய் நாட் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு கண்ணன் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் பாடலான 'உச்சத்துல வெண்ணிலவு' பாடல் வெளியாகியுள்ளது. யுகபாரதி வரிகளில் பிரதீப் குமார் பாடியுள்ள  பாடல் சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை