சினிமா செய்திகள்

‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’.. படம் பார்க்கும் முன் இந்த 15 படங்களை பாருங்க!

இப்படம் வரும் டிசம்பர் 18-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ படம் வெளியாக இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில், கண்டிப்பாக பார்க்க வேண்டிய 15 மார்வெல் படங்கள் மற்றும் தொடர்களின் பட்டியலை டிஸ்னி வெளியிட்டுள்ளது.

ரசிகர்களின் எதிர்பார்ப்பில் ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’

மார்வெல் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் திரைப்படங்களில் ஒன்றாக ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ உள்ளது. ராபர்ட் டவுனி ஜூனியர், கிறிஸ் எவன்ஸ், கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், பெட்ரோ பாஸ்கல் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். ரஸ்ஸோ சகோதரர்கள் இயக்கியுள்ள இப்படம் வரும் டிசம்பர் 18-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

தொடங்கியது முன்பதிவு

படம் வெளியாக இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில், ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ படத்திற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மார்வெல் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

டூம்ஸ்டேக்கு முன் பார்க்க வேண்டிய 15 படங்கள்

இதற்கிடையில், ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ படத்தின் கதைக்களத்தை ரசிகர்கள் சிறப்பாக புரிந்துகொள்ளும் வகையில், கண்டிப்பாக பார்க்க வேண்டிய 15 மார்வெல் படங்கள் மற்றும் தொடர்களின் பட்டியலை டிஸ்னி வெளியிட்டுள்ளது.

அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளவை:

* எக்ஸ்-மென் : டிரஸ்ட் எ ப்யூ பியர் தி ரெஸ்ட்

* எக்ஸ்2: எக்ஸ்-மென் யுனைடெட்

* கேப்டன் அமெரிக்கா: தி ஃபர்ஸ்ட் அவெஞ்சர்

* லோகி: சீசன் 1 மற்றும் சீசன் 2

* தி அவெஞ்சர்ஸ்

* அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிட்டி வார்

* அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம்

* ஷாங் சி அண்ட் தி லெஜண்ட் ஆஃப் தி ரிங்ஸ்

* வகாண்டா ஃபாரெவர்

* ஸ்பைடர்மேன் நோ வே ஹோம்

* கேப்டன் அமெரிக்கா பிரேவ் தி வேர்ல்ட்

* டெட் பூல் அண்ட் வுல்வரின்

* டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இன் தி மல்டிவர்ஸ் ஆஃப் மேட்னஸ்

* தண்டர்போல்ட்ஸ்

* தி ஃபென்டாஸ்டிக் ஃபோர் ஃபர்ஸ்ட் ஸ்டெப்ஸ்

மார்வெல் ரசிகர்களுக்கு ஸ்பெஷல் ட்ரீட்!

மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸில் பல கதாபாத்திரங்களும் வெவ்வேறு காலகட்டங்களில் இணைந்து வரும் நிலையில், ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படமும் முக்கியமான திருப்பங்களை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் படத்தின் வெளியீட்டுக்கு முன்பாக இந்த 15 படங்கள் மற்றும் தொடர்களை பார்த்து தயாராகிக் கொள்ள மார்வெல் ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.