சினிமா செய்திகள்

மக்கள் நீதி மய்ய கட்சிக்கு பேட்டரி டாச் சின்னம் மறுப்பு; கமல்ஹாசன் கண்டனம்

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் பயன் படுத்தி வந்த பேட்டரி டாச் சின்னத்தை ஒதுக்கீடு செய்ய தேர்தல் ஆணையம் மறுத்து விட்டது.

சென்னை:

தேதல் ஆணையத்தில் புதிதாக பதிவு செய்யப்பட்ட கட்சிகளுக்கும், ஆறு ஆண்டுகளுக்கு முன்பு அங்கீகரிக்கப்பட்டு அதன்பின் அதனை இழந்த கட்சிகளுக்கும் சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. சட்டப் பேரவைத் தேதலில் மொத்தமுள்ள தொகுதிகளில் குறைந்தபட்சம் 10 சதவீத இடங்களில் வேட்பாளாகளை நிறுத்தும் கட்சிக்கு, பட்டியலில் உள்ள சின்னங்களில் ஒன்று பொது சின்னமாக வழங்கப்படும். சின்னங்களின் பட்டியலில் இருந்து முன்னுரிமை அடிப்படையில் பத்து சின்னங்களைத் தேந்தெடுத்து தேதல் ஆணையத்துக்குத் தெரிவிக்க வேண்டும். அதிலிருந்து பொது சின்னமாக சம்பந்தப்பட்ட கட்சிக்கு தேதல் ஆணையம் அளிக்கும்.

அரசியல் கட்சிகளுக்கு சின்னங்களை ஒதுக்குவது தொடாபான உத்தரவுகள் 1968-இல் பிறக்கப்பட்டது. இந்த உத்தரவின் அடிப்படையில், பதிவு செய்யப்பட்டு, அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.

சட்டப் பேரவைத் தேதலை எதிகொண்டுள்ள மாநிலங்களைச் சேந்த சில கட்சிகள் தங்களுக்கு பொது சின்னம் ஒதுக்கக் கோரி விண்ணப்பம் செய்திருந்தன. அதன்படி, தமிழகத்தில் அம்ம மக்கள் முன்னேற்ற கழகம், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளுக்கு சின்னங்களை ஒதுக்கி தேதல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு பிரஷா குக்கா சின்னம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தமிழகத்தில் 234 தொகுதிகள், புதுச்சேரியில் 30 தொகுதிகளில் பொதுச் சின்னமான பிரஷா குக்கா சின்னத்தில் அமமுக வேட்பாளாகள் போட்டியிடுவா. இதேபோன்று, நாம் தமிழா கட்சிக்கு கரும்புடன் விவசாயி இணைந்திருக்கும் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு புதுச்சேரியில் மட்டும் பேட்டரி டாச் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் எந்த சின்னமும் ஒதுக்கவில்லை. தமிழகத்தின் சாபில் தேதல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள ஒன்பது கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் மக்கள் நீதி மய்யம் கோரிய பேட்டரி டாச் லைட் சின்னமானது, எம்.ஜி.ஆா. மக்கள் கட்சி என்ற கட்சிக்கு பொது சின்னமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தேதல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பேட்டரி டார்ச் லைட் சின்னம் வழங்கப்படாததற்கு கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். டார்ச் லைட் சின்னம் தர தேர்தல் ஆணையம் மறுத்து உள்ளது. சாதாரண ரூபத்தை விஸ்வரூபம் எடுக்க வைக்கிறார்கள் எனவும் கூறினார்.

SCROLL FOR NEXT