சென்னை,
நடிகர் நிவின் பாலியின் பிறந்தநாளை முன்னிட்டு பென்ஸ் படத்தில் அவர் நடிக்கும் வால்டர் கதாபாத்திர போஸ்டர் பகிரப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குநர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். இவர் 'லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ்' என்ற கான்செப்ட்டை தொடங்கி அதன் கீழ் பல படங்களை இயக்கி வருகிறார். அந்த வகையில் இவர் இயக்கிய "கைதி, விக்ரம், லியோ" போன்ற படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன. அந்த வரிசையில் அடுத்ததாக லோகேஷ் கைதி 2, ரோலக்ஸ் படங்களை இயக்க உள்ளார்.
மேலும், லோகேஷ் கனகராஜின் ‘ஜி ஸ்குவாட்’ நிறுவனம் தயாரிப்பில் ‘பென்ஸ்’ படம் உருவாகி வருகிறார். பாக்கியராஜ் கண்ணன் இயக்கிய வரும் ‘பென்ஸ்’ படம் லோகேஷ் சினிமாடிக் யூனிவர்ஸ் (LCU)-ன் ஒரு பகுதியாக உருவாகி வருகிறது. இதில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். மேலும் ரவி மோகன், மாதவன், சம்யுக்தா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். வில்லன் கதாபாத்திரத்தில் நிவின் பாலி நடித்து வருகிறார்.
இந்த நிலையில், நேற்று நடிகர் நிவின் பாலி தனது 42வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் பென்ஸ் படக்குழு இந்தபடத்தில் நிவின் பாலி நடிக்கும் வால்டர் கதாபாத்திர போஸ்டரை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது.