சென்னை,
சிபிராஜ் ‘அண்டர்டாக் ஃபிலிம்ஸ்’ (Underdog Films) என்ற புதிய திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இந்த நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக ‘புரொடக்ஷன் நம்பர் 1’ திரைப்படம் உருவாகி வருகிறது.
நடிகர் சத்யராஜின் மகனான சிபிராஜ், 2003-ம் ஆண்டு வெளியான ‘ஸ்டூடண்ட் நம்பர் 1’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வரும் அவர், வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். கடைசியாக ‘டென் ஹவர்ஸ்’ திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். இந்நிலையில், நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் சிபிராஜ் புதிய பயணத்தை தொடங்கியுள்ளார்.
தனது பிறந்தநாளான நேற்று, சிபிராஜ் ‘அண்டர்டாக் ஃபிலிம்ஸ்’ (Underdog Films) என்ற புதிய திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இந்த நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக ‘புரொடக்ஷன் நம்பர் 1’ திரைப்படம் உருவாகி வருகிறது.
‘ஜீப்ரா’ திரைப்படத்தை இயக்கிய ஈஷ்வர் கார்த்திக், இப்படத்தை இயக்குகிறார். இதில் சிபிராஜே கதாநாயகனாக நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து சிபிராஜ் கூறுகையில், “சினிமாவை நம்பி புதிய பாதையில் அடியெடுத்து வைத்திருக்கிறேன். சினிமாவுக்கு என்றென்றும் உண்மையாக இருப்பேன். எனது புதுமுயற்சிக்கு ரசிகர்கள் ஆதரவு தர வேண்டும்” என்றார். சிபிராஜ் - ஈஷ்வர் கார்த்திக் கூட்டணியில் உருவாகும் இப்படம் குறித்த இதர அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.