சினிமா செய்திகள்

"என் முதல் பட பூஜைக்கு வந்த ஒரே விஐபி பாக்யராஜ் தான்!" – நெகிழ்ந்த இயக்குநர் விக்ரமன்

திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் என பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சென்னை,

தமிழ் திரைப்பட உலகின் முன்னணி இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் வசனகர்த்தாவாகப் புகழ்பெற்ற கே. பாக்யராஜ் காலமானார். அவருக்கு வயது 73.

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர், திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவு தமிழ் திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் என பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில், பாக்யராஜ் மறைவு குறித்து இயக்குனர் விக்ரமன் கூறியதாவது; நான் இயக்கிய முதல் படமான புது வசந்தம் பட பூஜைக்கு பல விஐபி-க்களுக்கு பத்திரிகை வைத்து அழைத்தேன். பூஜைக்கு நான் எதிர்பார்த்த எந்த விஐபி-ம் வரவில்லை. அன்று வந்த ஒரேயொரு விஐபி பாக்யராஜ் சார் தான். அவருக்கு அன்று `அவசர போலீஸ் 100’ படபிடிப்பு இருந்தது. ஆனாலும் வந்து வாழ்த்திவிட்டு சென்றார். அதிலிருந்து நான் எடுத்த கடைசி படம் வரை நிகழ்வுகளில் அவர் கலந்துகொள்ளாமல் இருந்ததே இல்லை.. அப்படிப்பட்ட உள்ளம் கொண்டவர் அவர்’’

இவ்வாறு இயக்குனர் விக்ரமன் கூறினார்.