சினிமா செய்திகள்

காதலரை கரம் பிடித்த “பாரதி கண்ணம்மா” சீரியல் நடிகை வினுஷா தேவி

சீரியல் நடிகை வினுஷா தேவியின் திருமணம் காதலருடன் இன்று நடைபெற்றது. வினுஷா தேவியின் திருமண புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

‘பாரதி கண்ணம்மா’ புகழ் நடிகை வினுஷா தேவி, தனது நீண்டநாள் காதலரான லிங்கேஸ்வரனை கரம்பிடித்தார். இருவருக்கும் இன்று விமரிசையாக திருமணம் நடைபெற்றது. சின்ன திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலர் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

‘பாரதி கண்ணம்மா’ புகழ் நடிகை வினுஷா தேவி

மாடலிங் துறையில் கவனம் செலுத்திய வினுஷா தேவி பல விளம்பர படங்களில் நடித்ததன் மூலம் திரைத்துறையின் கவனத்தை ஈர்த்தார். அழகுப் போட்டிகள், போட்டோஷூட்கள் மற்றும் விளம்பரங்கள் மூலம் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிய அவர், பின்னர் சின்னத்திரைக்குள் நுழைந்தார். ஆரம்பத்தில் சிறிய வாய்ப்புகள் கிடைத்தாலும், அவற்றை சரியாக பயன்படுத்தி ரசிகர்களின் கவனத்தை பெற்றார். ‘பாரதி கண்ணம்மா’ தொடரிலிருந்து ரோஷினி ஹரிப்ரியன் விலகியபோது, அவருக்கு பதிலாக கண்ணம்மா கதாபாத்திரத்தில் வினுஷா தேவி நடித்து கவனத்தை ஈர்த்தார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பாரதி கண்ணம்மா’ தொடரில் நடித்ததன் மூலம் மக்களிடையே பிரபலமானவர் நடிகை வினுஷா தேவி. முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாவது பாகத்திலும் வினுஷா நடித்திருந்தார். விஜய் தொலைக்காட்சியின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார். மீண்டும் சீரியல் தொடரில் நடித்துவருகிறார்.

திருமண நிச்சயதார்த்தம்

திரையில் வெற்றிகரமான நாயகியாக வலம் வரும் வினுஷா தேவி, நீண்டநாள் காதலரான லிங்கேஸ்வரனை கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தினார். கடந்த ஜூன் மாதம் இருவருக்கும் திருமண நிச்சயம் நடைபெற்றது. இதன் புகைப்படங்களை ரசிகர்களுடன் வினுஷா பகிர்ந்திருந்தார்.

திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலங்கள்...

இந்த நிலையில், பாரதி கண்ணம்மா நடிகை வினுஷா தேவிக்கு, லிங்கேஸ்வரன் என்பவருடன் இன்று திருமணம் நடைபெற்றது. உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் பிரமாண்டமாக இந்த நிகழ்வு நடைபெற்றது. இதில் சினிமா, சின்ன திரை பிரபலங்கள் பலரும் பங்கேற்றனர். சின்ன திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலர் வினுஷா - லிங்கேஸ்வரன் ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.