‘பாரதி கண்ணம்மா’ சீரியல் நடிகை வினுஷா தேவிக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது. வினுஷா தேவியின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
மாடலிங் துறையில் கவனம் செலுத்திய வினுஷா தேவி பல விளம்பர படங்களில் நடித்ததன் மூலம் திரைத்துறையின் கவனத்தை ஈர்த்தார். அழகுப் போட்டிகள், போட்டோஷூட்கள் மற்றும் விளம்பரங்கள் மூலம் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிய அவர், பின்னர் சின்னத்திரைக்குள் நுழைந்தார். ஆரம்பத்தில் சிறிய வாய்ப்புகள் கிடைத்தாலும், அவற்றை சரியாக பயன்படுத்தி ரசிகர்களின் கவனத்தை பெற்றார். ‘பாரதி கண்ணம்மா’ தொடரிலிருந்து ரோஷினி ஹரிப்ரியன் விலகியபோது, அவருக்கு பதிலாக கண்ணம்மா கதாபாத்திரத்தில் வினுஷா தேவி நடித்து கவனத்தை ஈர்த்தார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பாரதி கண்ணம்மா’ தொடரில் நடித்ததன் மூலம் மக்களிடையே பிரபலமானவர் நடிகை வினுஷா தேவி. முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாவது பாகத்திலும் வினுஷா நடித்திருந்தார். விஜய் தொலைக்காட்சியின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார். சீரியல் தொடரில் நடித்துவருகிறார்.
இந்த நிலையில், பாரதி கண்ணம்மா நடிகை வினுஷா தேவிக்கு, லிங்கேஸ்வரன் என்பவருடன் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் எளிமையான முறையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. இதில் சினிமா, சின்ன திரை பிரபலங்கள் பலரும் பங்கேற்றனர்.
வினுஷா தேவி - லிங்கேஷ்வரன் ஜோடிக்கு ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை, இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகின்றனர். இவர்களின் திருமண தேதி குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.