சினிமா செய்திகள்

அஜித்துடன் பைக் பயணம்: அனுபவத்தை பகிர்ந்த மஞ்சு வாரியர்

அது ஆன் ஸ்க்ரீனில் மட்டுமல்லாமல், ஆப் ஸ்க்ரீனிலும் இருக்கிற மறக்க முடியாத வாழ்க்கை அனுபவம் என்று மஞ்சுவாரியர் கூறினார்.

ஆர்யா, கவுதம் கார்த்திக், சரத்குமார், மஞ்சு வாரியர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மிஸ்டர் எக்ஸ்’. விஷ்ணு விஷாலை வைத்து ‘எப்ஐஆர்’ படத்தை இயக்கிய மனு ஆனந்த் இயக்கியுள்ளார். இந்தப் படம் ஸ்பை ஆக்‌ஷன் ஜானரில் உருவாகியுள்ளது. வரும் 17ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் புரமோஷன் நிகழ்வாக கல்லூரி நிகழ்வு ஒன்று நடைபெற்றது. இதில் மஞ்சு வாரியர் கலந்து கொண்டார்.

மேடையில் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த மஞ்சு வாரியரிடம், அஜித்துடன் பைக் பயணம் மேற்கொண்ட புகைப்படம் காட்டப்பட்டு, அது குறித்த அனுபவம் கேட்கப்பட்டது. இதற்கு மஞ்சு வாரியர் அளித்த பதில் வருமாறு:

"ஆன் ஸ்க்ரீனில் மட்டுமல்லாமல் ஆப் ஸ்க்ரீனிலும் இருக்கிற மறக்க முடியாத வாழ்க்கை அனுபவம். இந்த பயணம் முடிந்த பின்னர், திரும்பிப் போய் டிரைவிங் லைசன்ஸ் வாங்கி, பைக்கும் வாங்கிவிட்டேன்.

பயணம் என்பது வாழ்க்கையில் எல்லோரும் செய்ய வேண்டியது என சொல்ல விரும்புகிறேன். ஏனெனில் சுற்றியுள்ள வாழ்க்கையை கவனியுங்கள். உங்களுக்கு இருப்பது எல்லாம் ஒரு பிரச்சினையே இல்லை என்று அந்த அனுபவங்கள் மூலம் புரிந்து கொள்வீர்கள். அது உங்களை தன்னடக்கம் மிக்கவராக மாற்றும், சாந்தப்படுத்தும்" இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT