சினிமா செய்திகள்

சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு ரத்ததான முகாம்... ரசிகர்கள் - போலீசார் இடையே வாக்குவாதம்

50-க்கும் மேற்பட்ட சூர்யா ரசிகர்கள் தன்னார்வத்துடன் ரத்ததானம் செய்து சமூகப் பணியில் ஈடுபட்டனர்.

சென்னை,

பிறந்தநாளை சமூக சேவையுடன் கொண்டாடிய ரசிகர்கள்

நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் வருகிற 23-ஆம் தேதி தனது 51வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். சூர்யாவின் பிறந்தநாளையொட்டி, கடந்த சில ஆண்டுகளாகவே சூர்யாவின் ரசிகர்கள் ரத்ததானம், பல்வேறு நலத்திட்ட உதவிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல, சூர்யாவும் ரசிகர்களுடன் இணைந்து ரத்ததானம் செய்து, மற்றவர்களுக்கும் முன்மாதிரியாகத் திகழ்ந்துள்ளார்.

அதன் ஒரு பகுதியாக, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ரத்ததான முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பேனர்களுடன் வந்த ரசிகர்கள்

இதன்படி, நேற்று காலை ரத்ததானம் செய்வதற்காக ஏராளமான சூர்யா ரசிகர்கள் மருத்துவமனைக்கு வந்தனர். அப்போது அவர்கள் சூர்யாவின் படத்துடன் கூடிய பேனர்களையும் கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.

மருத்துவமனை வளாகத்திற்குள் அனுமதியின்றி பேனர்களை கொண்டு வரக்கூடாது என்று பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தெரிவித்தனர். இதனால் ரசிகர்களுக்கும் போலீசாருக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் போலீசார் மற்றும் மருத்துவமனை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி ரசிகர்களை சமாதானப்படுத்தினர்.