சினிமா செய்திகள்

தாயகத்தின் வீதியெங்கும் ரத்த ஆறு... கவனம் ஈர்க்கும் விஜய் ஆண்டனி பட பாடல்

விஜய் ஆண்டனி நடித்துள்ள 'ரத்தம்' திரைப்படத்தின் புதிய பாடல் வெளியாகி உள்ளது.

சென்னை,

இயக்குனர் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'ரத்தம்'. இந்த படத்தில் விஜய் ஆண்டனி, மகிமா நம்பியார், ரம்யா நம்பீசன், நந்திதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இப்படம் வருகிற 28-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டு அக்டோபர் 6-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், 'ரத்தம்' படத்தில் இடம்பெற்றுள்ள 'ஒரு நாள்' பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. தெருக்குரல் அறிவு எழுதியுள்ள இந்த பாடலை அவருடன் இணைந்து விஜய் ஆண்டனி பாடியுள்ளார். இந்த தாயகத்தின் வீதியெங்கும் ரத்த ஆறு பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

SCROLL FOR NEXT